tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 9-ஆவது நாளாக தஞ்சாவூரில் தொடர் போராட்டம்

தஞ்சாவூர், பிப்.23- குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சா வூர் கீழவாசல் அத்தர் மஹல்லா பள்ளி வாசல் அருகே இஸ்லாமியர்கள் 9-ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பிற மாநிலங்கள் போன்று இந்த சட்டத்தை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. இதற்காக சட்ட மன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி, தஞ்சாவூரில் அனைத்து இஸ்லாமிய கூட்ட மைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் ஈடுபட்டனர். இவர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து போராட்டத்தின் ஒருங்கி ணைப்பாளர் எம்.அப்துல்லா ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதா வது: இந்தியாவில் குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் அறி விக்கும் வரை போராட்டம் தொடரும். மேலும் வரும் 26-ஆம் தேதி தஞ்சாவூருக்கு வருகை தரும் தமிழக முதல்வரின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் எங்களது போராட்ட வடிவம் இருக்கும்” என்றார். பாபநாசம் தாலுகா சக்கராப்பள்ளி யில், ஏராளமான பெண்கள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.மனோகரன் பேசுகையில், “டிசம்பர் 11 முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் மக்கள் வெகுண் டெழுந்து, தன்னெழுச்சியாக போராடிக் கொண்டுள்ளனர்.  ஆனால், இவையெல்லாம் மோடி, அமித்ஷா காதுகளை எட்டவில்லையா. இதுபோன்ற சட்டங்களை இஸ்லாமி யர்கள் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் உங்களோடு இணைந்து போராடிக் கொண்டுள்ளனர். இந்த போராட்டங்கள் அனைத்தும் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகை யில் உள்ளது.  உரிமைக்காக போராடிக் கொண்டிருக் கும் மக்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வரிசையில் நின்று போராடும் என உறுதி அளிக்கிறேன்” என்றார். விவ சாயிகள் சங்கம் தங்கராசு, சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.சேக் அலாவு தீன் ஆகியோர் உடனிருந்தனர்.
பொன்னமராவதி
புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே காரையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சனிக்கிழமையன்று காரையூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பி னர் ஏனாதி ஏ.எல்.ராசு தலைமை வகித் தார். கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆர். பிரதாப்சிங், வி.பி.நாகலிங்கம், பி.செல்வம் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செய லாளர் மு.மாதவன், மாவட்ட துணைச் செய லாளர் கே.ஆர்.தர்மராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி சிறப்புரை யாற்றினார்.

;