தஞ்சாவூர் செப், 22- தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள மரக்காவலசை கொடிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் விருதுகள் வழங்கும் விழா, மரக்கன்றுகள் நடும் விழா, நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் வேத.குஞ்சருளன் தலைமை வகித்தார். தலைமை அமைப்பாளர் எஸ்.ஆர். யோகானந்தம், மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஒய்.மகாலெட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இ.குருசேவ், ஒன்றிய பொறுப்பாளர்கள் எஸ்.கருப்பையன், ஆ.செ.சிவக்குமார் சி.கே.சரவணன், ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் டி.தனபால், துணை ஒருங்கிணைப்பாளர் கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அமைப்பாளர் மு.க.பன்னீர்செல்வம் வரவேற்றார். நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜெயபாலன் விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பொதுச் செயலாளர் யூ.வசந்த் மக்கள் விழிப்புணர்வு விளக்கவுரையாற்றினார். விழாவில் துணை பொதுச் செயலாளர் எஸ்.செல்வராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி டி.கிருத்திகா, தலைமை ஆலோசகர் ராமகிருஷ்ணன், தேசிய ஒருங்கிணைப்பாளர் சோலைமலை, மாநில நிர்வாக செயலாளர்கள் என்.ஜோதி, ஆர்.தமிழ்செல்வி, உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். விழாவில் சிறந்த சமூக சேவகர் விருது ஆ.பழனிவேல், சிறந்த தலைமையாசிரியர் விருது வி.மனோகரன், சிறந்த சமூக ஆர்வலர் விருது ஏ.பால்சாமி, சிறந்த வருவாய் ஆய்வாளர் விருது எம்.அசரப்அலி, சிறந்த உதவி ஆய்வாளர் விருது எல்.அருள்குமார், சிறந்த மக்கள் சேவை விருது கராத்தே கே.பாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிறைவில் கழுமங்குடா கா.கார்மேகம் நன்றி கூறி பேசினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.