tamilnadu

img

தஞ்சாவூரில் கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிட முன்னதாக தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு விவசாய பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறும் என விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை தொடர்ந்து, 16-ந் தேதி கல்லணை திறக்கப்பட்டது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்துக்கு கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை வழக்கமாக இந்த ஆண்டும் தர மறுத்தால் மழை பெய்தால் மட்டுமே இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்க முடியும் என்ற பரிதவிப்பில் விவசாயிகள் உள்ளனர்.

பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு 1 மாதத்தை நெருங்கும் நிலையில் தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களும் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.இதனால் ஆழ்துளை கிணறுகளை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளனர். ஆறு, ஏரி குளங்களை நம்பி உள்ள விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. கல்லணை கால்வாயின் மெயின் வாய்க்காலில் 
இருந்து தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதியில் பிரிந்து செல்லும் புதுப்பட்டினம், 1 மற்றும் 2-ம் நம்பர் வாய்க்கால்களில் பல இடங்களில் முழுமையாக தூர் வாரப்படவில்லை. இதனால் காவிரி நீர் கடைமடை பாசன பகுதியை எட்டுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது.

;