tamilnadu

பெருமாள் கோவில் தெப்பத் திருவிழா இஸ்லாமியர்களின் மனிதநேயத்திற்கு பாராட்டு

கும்பகோணம், ஜன.9- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில் திருவிழா கடந்த 10 தினங்களாக நடை பெற்று வருகிறது. அதன் இறுதி விழாவான தெப்ப உற்ச வத்தின் போது ஏதும் விபத்துகள் நடந்தால் தீய ணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைக்காக நிறுத்தி வைக்கப்ப ட்டன. அதில் நாச்சியார்கோவில் பகுதியில் எங்கு  விபத்து நடந்தாலும் முதலில் வந்து சிகிச்சை க்கு அழைத்துச் செல்வதும், விபத்தில் மனித இற ப்புகள் ஏற்படும் பொழுது அவர்களை சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் இலவசமாக எடுத்து வந்து கொடுப்பதிலும் பொதுமக்கள் பாராட்டை பெற்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னே ற்ற கழக சார்பில் இயங்கி வரும் ஆம்புலன்ஸ்  செயல்பட்டு வருகிறது. விபத்தில் அடிபட்ட வர்களுக்கு சாதி,மத வேறுபாடின்றி ரத்த தானம் உள்ளிட்ட உதவிகளை இந்த இயக்கத் தொண்ட ர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்துக் கோயிலான சீனிவாச  பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தின்போது திருவிழா முடியும் வரை நாச்சியார்கோவில் தமுமுக ஆம்புலன்ஸ் பொறுப்பாளர் நிஷார், ஆதில் மற்றும் அவரது குழுவினருடன் ஆலய  வாசலில் நின்று விபத்துகள் ஏற்பட்டால் உதவி  செய்திட தயார் நிலையில் இருந்தனர். இதனை பார்த்த அனைத்து மக்களும் மனிதநேயமிக்க செயலை செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆம்புலன்ஸ் நிர்வாகிகளை பாராட்டி வருகின்றனர்.

;