தஞ்சாவூர், ஆக.14- மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண் ணீரை வரவேற்கும் விதமாக, கல்லணை புதுப்பொலிவு பெற்றுள் ளது. கர்நாடகாவில் அணைகள் நிரம்பிய தால், உபரி நீர் முழுவதும், தமிழ கத்திற்கு திறந்து விடப்பட்டது. இத னால் மேட்டூர் அணை 100 அடிக்கு மேல் எட்டியது. இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, கடந்த ஆக.13-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாச னத்துக்கு தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் வெள்ளிக்கிழமை (ஆக.16) தஞ்சை மாவட்டம் கல்ல ணைக்கு வந்து விடும் என்கிற நிலை யில், அன்றே, பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது. இந்நிலையில், காவிரி, வெண் ணாறு, கொள்ளிடம், கல்லணை கால் வாய் ஆகிய அனைத்து அணை களுக்கும் புதுவர்ணம் பூசும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் 116 ஷட்டர்களில், 54 புதிதாக மாற்றப் பட்டுள்ளன. மீதமுள்ள 62 ஷட்டர்களும் சேர்த்து சரியாக இயங்குகின்றனவா என ஏற்றி, இறக்கி பார்க்கப்பட்டு கிரீஸ் போடப்பட்டு தண்ணீர் வரும்போது பயன்படுத்த ஏதுவாக சரி செய்யப் பட்டுள்ளது. அத்துடன் அகத்தியர் சிலை, காவிரித்தாய் சிலை, கரிகால்சோழன் சிலை, அனுமர் கோவில், ராஜராஜ சோழன் சிலை, மீனவர் மீன் பிடிக்கும் சிலை, நெற்கதிர் கொண்டு செல்லும் பெண் சிலை என அனைத்து சிலை களும் வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவு பெற்றுள்ளது. இவற்று டன் கரிகால்சோழன் பூங்கா, காவிரி கரையின் வடக்கு புறம் உள்ள பூங்கா க்களும் சரி செய்யப்பட்டுள்ளன.