tamilnadu

மத்திய கல்வி நிலையங்களில் உதவித் தொகை பெறலாம்

தஞ்சாவூர், ஜன.9- மத்திய அரசின் கல்வி  நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவி த்தொகை பெற விண்ணப்பி க்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்க லைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்ப டுத்தப்பட்டோர், மிகப்பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவி த்தொகை பெற விண்ணப்பி க்கலாம்.  2019-20 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு மற்றும் பிற மாநி லங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்ட ப்படிப்பு மற்றும் பட்ட மேற்ப டிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்ச த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவி த்தொகையாக மாணவர் ஒரு வருக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரை வழங்கு வதற்கு அரசாணை பிறப்பிக்க ப்பட்டுள்ளது.  எனவே கல்வி உதவித்தொ கைக்கு விண்ணப்பிப்ப தற்கான விண்ணப்பம் குறித்து  தகுதி மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லரை அணுகி பயன்பெற லாம்” என தெரிவித்துள்ளார்.

;