tamilnadu

img

சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவராக திமுக முத்துமாணிக்கம் தேர்வு பேராவூரணியில் தேர்தல் ஒத்திவைப்பு

.தஞ்சாவூர், ஜன.11- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றி யத்தில் ஒன்றியப் பெருந்த லைவருக்கான தேர்தல் நடை பெற்றது. தலைவர் பத வியை தி.மு.க கைப்பற்றி யது.  தஞ்சை மாவட்டம் சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றி யத்தில் ஒன்றியப் பெருந் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக-அதிமுகவிடையே கடும்  போட்டி ஏற்பட்டது.  சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்ற அறையில்  ஒன்றிய பெருந்தலைவரு க்கான தேர்தல் சனிக்கி ழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. திமுக 9 ஒன்றி யக் குழு உறுப்பினர்கள், ஒரு சுயேச்சை ஒன்றியக் குழு  உறுப்பினரின் ஆதரவோடு 10  ஒன்றியக் குழு உறுப்பி னர்களும், அதிமுக 6 ஒன்றி யக் குழு உறுப்பினர்களை பெற்றிருந்த போதிலும் தேர்தல் போட்டி நடை பெற்றது.  தேர்தல் நடத்தும் அலு வலர் ஊரக வளர்ச்சி துறை  உதவி இயக்குனர் முருகே சன் தலைமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) கை.கோவிந்தராசன் முன்னி லையிலும் தேர்தல் நடை பெற்றது. திமுக சார்பில் மு.கி. முத்துமாணிக்கம், அதிமுக சார்பில் சிவ.மதிவாணன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 10 வாக்குகள் பெற்று மு.கி.முத்துமாணிக்கம் வெற்றி பெற்றார்
பேராவூரணி 
பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் சனிக்கிழமை காலை  11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒன்றிய அலுவலகத்திற்கு திமுக உறுப்பினர்கள் அண்ணாதுரை, மதிவா ணன், ஆல்பர்ட் குணாநிதி, சங்கவி மதன்குமார், ராஜ ப்பிரியா ஜெயராமன், நவ நீதம் ஆறுமுகம், அதிமு கவைச் சேர்ந்த மாலா போத்தியப்பன் ஆகியோர் உள்ளிட்ட 7 பேர் மட்டுமே வந்திருந்தனர்.  காலக்கெடு முடிந்தும் அதிமுகவைச் சேர்ந்த 6 உறு ப்பினர்கள், பாஜக உறுப்பி னர் ஒருவர், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 8 பேர் வரவில்லை. இதைய டுத்து தேர்தல் நடத்தும் அலு வலரான, முத்திரைத்தாள் கட்டணம் தனித்துணை ஆட்சியர் அ.கமலக்க ண்ணன் தேர்தலை ஒத்தி வை ப்பதாகவும், மாநில தேர்தல்  ஆணையத்துக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் குறி ப்பிடும் வேறொரு தேதியில் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.  இருந்தபோதிலும், அதி முகவினர் திடீரென வந்து  அதிகாரிகள் ஒத்துழைப்போடு வாக்களிக்கக்கூடும் என அங்கிருந்து செல்லாமல் திமுகவினர் காத்திருந்தனர்.
ஒன்றியக்குழு தலைவர்கள்
தஞ்சாவூர் ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த வைஜெயந்திமாலா, அம்மாபேட்டை ஒன்றி யக்குழு தலைவராக திமுக வைச் சேர்ந்த கலை ச்செல்வன், திருவோணம் ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த செல்லம் சௌந்தர் ராஜன், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த க.சுமதி, கும்பகோணம் ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த காய த்ரி அசோக்குமார், திருப்ப னந்தாள் ஒன்றியக்குழு தலை வராக திமுகவைச் சேர்ந்த தேவி ரவிச்சந்திரன், பூதலூர் ஒன்றியக்குழு தலைவராக  திமுகவைச் சேர்ந்த அரங்க நாதன், பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த பழனி வேல், திருவையாறு ஒன்றி யக்குழு தலைவராக திமு கவைச் சேர்ந்த அரசபாகரன், திருவிடைமருதூர் ஒன்றி யக்குழு தலைவராக திமுக வைச் சேர்ந்த சுபா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுக்கூர் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த அமுதா போட்டி யின்றி தேர்வு செய்யப்ப ட்டார்.  ஒரத்தநாட்டில் தலா 14 வாக்குகள் பெற்றதில் குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் பார்வதி தலை வராக தேர்வு செய்யப்பட்டார். தஞ்சா வூர் மாவட்டத்தில் உள்ள 14  ஊராட்சி ஒன்றியங்களில் திமுக 12 இடங்களிலும், அதி முக 1 இடத்திலும் தலைவர் பதவியைக் கைப்பற்றி உள்ளது. பேராவூரணி ஒன்றி யத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்ட ஊரா ட்சிக் குழுவில், மொத்தம் 28  வார்டுகள் உள்ளன. இதில் திமுக கூட்டணியில் 22 பேரும் அதிமுகவில் 6 பேரும் வெற்றி  பெற்றனர். இவர்களில் அதி முகவில் ஒரு உறுப்பினருக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் தேர்தலில் அதிமுக தரப்பில் உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. எனவே திமுகவைச் சேர்ந்த பி.உஷா போட்டியின்றி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராகத் தேர்வு செய்ய ப்பட்டார்.  இவருக்கு மாவட்ட ஆட்சி யர் ம. கோவிந்தராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

;