தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கி இன்று மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் கடலோர பாதுகாப்பு குழுமம், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், மீன்வளத்துறை ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது படகு பதிவு புத்தகம், அடையாள அட்டை, பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.