tamilnadu

img

திருக்காட்டுப்பள்ளியில் மணல் திருட்டு தடுக்க அனைத்துக் கட்சிகள் கோரிக்கை

தஞ்சாவூர், அக்.2- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகில், சட்ட விரோத மணல் திருட்டை தடுக்க வலி யுறுத்தி அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் கண்டனக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.  திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆறு மற்றும் காவிரி, வெண்ணாற்றில் கனரக வாகனங்கள் மூலம் இரவு பகலாக நடந்து வரும் மணல் திருட்டை தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்கள் கொள்ளை போகாமல் பாதுகாக்க வலியுறுத்தியும், இதனைக் கண்டு கொள்ளாத காவல்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை அலுவலர்களைக் கண்டித்தும் கூட்டத்தில் பேசினர்.  இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வழக்க றிஞர் வெ.ஜீவகுமார், பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.காந்தி, சி.சிவசாமி, பி.முருகேசன், எஸ்.மெய்யழகன், டி.ஸ்ரீதர், எம்.சம்சுதீன், உதயகுமார், பி.கலைச்செல்வி, திமுக கல்லணை எஸ்.செல்லக்கண்ணு, சண்முகராஜ், டி.ஜெயராமன், காங்கிரஸ் நிர்வாகியும், பூதலூர் வட்டார கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு சங்கத் தலைவர் இரா. இராஜேந்திரன், காங்கிரஸ் டி.கே.கலைச்செல்வன், மதிமுக பி.வி.முருகா னந்தம், அமமுக ஆர்.மதியழகன், பி.கூட நாணல் கர்ணன், நாம் தமிழர் கட்சி பி.அற்புத தாசர், கோவிலடி முன்னாள் கவுன்சிலர் என்.ரமேஷ், கே.முருகானந்தம், விவசாயிகள் சங்கம் கோவிந்தராஜ், சுக்காம்பார் எஸ்.சக்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அக். 5 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

;