tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுக.. மார்ச் 4-ல் டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்:
காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் சரோஜ்நினைவகத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஎம் சார்பு) மாநிலபொதுச்செயலாளர் பெ.சண் முகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐசார்பு) மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வே.துரைமாணிக்கம் முன் னிலை வகித்தார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துசெய்தியாளர்களிடம் பெ.சண் முகம் தெரிவித்ததாவது: 

“விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் பல ஆண்டுகளாக வற்புறுத்தியதையொட்டி, தமிழ்நாடு அரசு காவிரிப் படுகையை பாதுகாக்கும் வகையில்,தமிழ்நாடு வேளாண் மண்டலபாதுகாப்பு மேம்படுத்துதல் சட் டம் 2020 ஐ சட்டப்பேரவையில் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். இதற்கென்று உருவாக்கப் பட்டுள்ள வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பில் உள்ள 30 நபர்களில் 20 பேர் அமைச்சர் களும், அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளது ஏற்புடையதல்ல. இந்த கமிட்டி பரிந்துரை செய்தாலும், அரசு தான் இறுதி முடிவு எடுக்கப் போகிறது. ஆகவே, விவசாய சங்க பிரதிநிதிகள் கூடுதலான எண்ணிக்கையில் இடம் பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். விவசாயத் தொழிலாளர் பிரதிநிதிகளும் இடம் பெறுவது அவசியம், என்பதை அரசிற்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம். 

காவிரி டெல்டா பகுதிகளான அரியலூர் மாவட்டம் திருமானூர், டி.பளூர், திருச்சி மாவட்டம்ஸ்ரீரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரம்பூர், கரூர் மாவட்டம் குளித்தலை ஆகிய தாலுகாக்களையும் இணைத்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட் டத்தை எதிர்த்துப் போராடி, திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தஆயிரக்கணக்கானோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர்ஆகிய மாவட்டத் தலைநகரங்களிலும், அரியலூர், திருச்சி, கரூர்ஆகிய மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட வட்டத் தலைநகரங்களிலும், மார்ச் 4 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது” என இக்கூட்டம் தீர்மானித்துள்ளது என்றார். 

மேலும், ஹைட்ரோ கார்பன்எடுப்பதற்கு கடந்த ஆண்டு வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு இதற்கு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்”எனவும் கூட்டம் வலியுறுத்தியுள் ளது. கூட்டத்தில், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் பசுமை வளவன், அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ் ணன், விவசாயிகள் சங்க கூட்டியக்கம் காவிரி தனபாலன், மதிமுக விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன், அகிலஇந்திய மக்கள் சேவை இயக்கம் சண்முகசுந்தரம், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, சமவெளி பாதுகாப்பு இயக்கம் பழனிராஜன், சிபிஎம் சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்வி.சுப்பிரமணியன், மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், எஸ்.பொன்னுச்சாமி, தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், திருச்சி மாவட்டச் செயலாளர் சிதம்பரம், அரியலூர் மாவட்டச் செயலாளர் மகாராஜன், தஞ்சைமாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள்பி.எஸ்.மாசிலாமணி, பா.பாலசுந்தரம், வீரமோகன் மற்றும் பல் வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.         (ந.நி)

;