தஞ்சாவூர் நவ.7- தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நவ.9 அன்று ஒன்பது இடங்களில் நடைபெற உள்ளது. தஞ்சை வட்டத்தில் பஞ்சாரம், திருவையாறு- முஹாஷா கல்யாணபுரம், ஒரத்தநாடு- வடக்கிக்கோட்டை, கும்பகோணம் -தாராசுரம், பாபநாசம் -இரும்புத்தலை, திருவிடைமருதூர்-சாத்தனூர், பட்டுக்கோட்டை- துவரங்குறிச்சி கிழக்கு, பேராவூரணி -செங்கமங்கலம், பூதலூர்- விண்ணமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. எனவே, பொது விநியோகத் திட்டம் தொடர்பான ஏதேனும் குறைகள் இருப்பின், தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் முகாமிட்டிருக்கும் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.