tamilnadu

கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகள்:  வேதனையில் பெற்றோர்

கும்பகோணம்,  ஜூன் 01- ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் கும்பகோணத்தில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை டெபாசிட் செய்யுமாறு மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகின்றனர். வரும் கல்வி  ஆண்டில் முதல் பருவ கட்ட ணம் ரூ. 17 ஆயிரம் மற்றும் நோட்டு புத்தகங்களுக்கு ரூ.18 ஆயிரம் கட்ட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். மேலும் பள்ளி பேருந்தில் செல்லும் மாணவர்கள் உடனே ஆண்டு கட்டணம் முழுவதும் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். பள்ளிகளுக்கு ஏற்படும் நிர்வாக சுமை அதிகம் என்பது பெற்றோர்களுக்கு தெரியும். தற்போது ஏற் பட்டுள்ள சூழ்நிலையில் லாக் டவுன் போது கட்டணம் வசூலிப்பதை ஒத்தி வைக்க வேண்டும் என பெற்றோர்கள்  தெரிவித்து வருகின்றனர். ஊரடங்கின் போது மாண வர்களின் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படு வது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச் சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளதை தனியார் பள்ளிகள் மறுத்து வருகிறன்றன. இந்த நேரத்தில் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கூறுவது சரியல்ல கல்வி கட்டணத்தை எப்படி செலுத் துவது என்று பெற்றோர் மிகுந்த கவலையில் ஆழ்ந் துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் கல்விக் கட்டணம் கேட்டு நெருக்கடி தரும் கல்வி நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிகள் தொடங்கி முதலாம் பருவம் முடிவடையும் வரை தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அர சாணை பிறப்பிக்க வேண் டும் என்று பெற்றோர்கள்  வலியுறுத்தி உள்ளனர். 

;