தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளு நர் சங்க மாவட்ட பொதுக் குழுக்கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் டி.கவிதா தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. ஜி.சங்கர் பாரதி வரவேற்றுப் பேசினார். அஞ்சலி தீர்மானம் முடித்து மாநில பொருளாளர் அ.விஸ்வேஷ்வரன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கு.பாஸ்கரன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் கே.ரமேஷ் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி வாழ்த்திப் பேசினார். மாநில பொதுச்செயலாளர் உ.சண்முகம் நிறைவுரையாற்றினார். முகமது இஸ்மாயில் நன்றி கூறினார். பின்னர் பணி நிறைவு பெற்ற மருந்தாளுனர் எஸ்.கே.ஹேம லதாவிற்கு நினைவுப் பரிசு, புத்தகம் வழங்கப்பட்டது. கூட்டத்தில், “மாநில செயற்குழு முடிவின்படி தமிழக சுகாதார அமைச்சருக்கு, மாவட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை கடிதம் அனுப்புவது, வரும் மார்ச் 26 சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திரளாக சென்று கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.