தஞ்சாவூர், நவ.9- பல ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்து வரும், பேராவூரணி ரயில்வே லைன் கிழக்குத் தெரு பகுதி மக்கள், தென்னக ரயில்வே உயர் அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு விடிவுக்காக காத்திருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி பேரூராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டு, ரயில் நிலையம் எதிரில் உள்ள ரயில்வே லைன் கிழக்குத் தெருவில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் ரயில்வே துறைக்கு சொந்த மான இடத்தையே பல தலைமுறை களாக, குறிப்பாக 125 ஆண்டுக ளுக்கும் மேலாக பொதுப்பாதை யாக பயன்படுத்தி வருகின்றனர். பழைய பேருந்து நிலையம் தொடங்கி, செங்கொல்லை, நீல கண்டபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு இவ்வழியாகவே பொதுமக்கள் பயணிப்பது வழக்கம். மேலும் பேராவூரணி பகுதியில் மொய் விருந்து விழாக் காலங்களில் சேதுசாலை, பட்டுக்கோட்டை சாலை, முதன்மைச் சாலை ஆகி யவை கூட்ட நெரிசலில் திணறும். அப்போது இந்த சாலை தான் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் புறவழிச்சாலையாக இருக்கும். புதிய பேருந்து நிலை யம், அறந்தாங்கி, மற்றும் பள்ளி, கல்லூரி செல்வோர் இந்த பாதை யையே பயன்படுத்துவர். இந்த மண் சாலையை தார்ச்சா லையாக மாற்றித் தருமாறு, இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வா கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பேரூராட்சி நிர்வாகம் சாலையை அமைக்க ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றி யது. இதுகுறித்து, பேராவூரணி பேரூராட்சி சார்பில் ரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் இந்த சாலை அமைக்க அனுமதி அளித்தால், பேரூராட்சி செலவில் சாலை அமைக்கப்படும். இது இப்பகுதி மக்களுக்கு மட்டு மல்லாமல், ரயில்வே துறைக்கும் பயனுடையதாக இருக்கும். ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில், தார்ச்சாலை அமைக் கப்படும் என்பதை தவிர வேறு எந்த உரிமையும் கோர மாட்டோம் என கூறியிருந்தனர். மேலும், இதுகுறித்து தென்னக ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட முதுநிலை பொறியாளர் பன்னீர் செல்வத்தை, பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) மு.பொன்னுசாமி தலைமையில், தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம், பேரூராட்சி முன் னாள் உறுப்பினர் மு.சீனிவாசன், எம்.எஸ்.ஆறுமுகம், சோமசுந்தரம், குமார், நீலகண்டன் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில், மனுவின் மீது இதுவரை ஏதும் நடவடிக்கை எடுக்காத நிலையில், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் டாக்டர் மு. சீனிவாசன் தலைமையில், எம்.எஸ். ஆறுமுகம், குமார், சிலம்பரசன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழு வினர், வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் தென்னக ரயில்வே முது நிலை பொறியாளரைச் சந்தித்து நினைவூட்டப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ரயில்வே முது நிலை பொறியாளர், “பேரூராட்சி மூலமாக இடத்தின் வரைபடம், மற்றும் குடியிருப்போர் விப ரத்துடன் விண்ணப்பிக்குமாறு” அறி வுறுத்தினார். இந்நிலையில், ரயில்வே துறை கேட்டிருந்த ஆவ ணங்களை, பேராவூரணி பேரூ ராட்சி செயல் அலுவலர் மு.மணி மொழியன் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று அளித்தனர்.