தஞ்சாவூர், ஜன.29- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பழைய நகரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தார். பட்டா மாறுதல் ஆணை, வேளாண் மானிய உதவி கள் உள்ளிட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. தோட்டக்கலை, கால்நடை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டது. வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப் பன், வட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், மண்டல துணை வட்டாட்சியர் கவிதா, பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் வீரசோழன் கலந்து கொண்டனர். துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.