தஞ்சாவூர், பிப்.22- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளியன்று உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது. இவ்வி ழாவிற்குத் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சென்னைப் பல்கலை க்கழக முன்னாள் தமிழ்த் துறை தலைவர் முனைவர் ந.தெ ய்வசுந்தரம் சிறப்புரையாற்றினார். முன்னதாக தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் கு.சின்னப்பன் வர வேற்றார். மொழிப்புலத் தலைவர் முனைவர் இரா.காமராசு வாழ்த்துரை வழங்கினார். நாடகத்துறை தலைவர் முனைவர் பெ.கோவிந்தாசாமி நன்றியுரை கூறினார்.