tamilnadu

img

மேகதாது அணை: ஆய்வுக்கு அனுமதி தந்தது சட்டவிரோதம்.... தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் கண்டனம்....

தஞ்சாவூர்:
மேகதாதுவில் அணை கட்ட ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது சட்டவிரோத நடவடிக்கை என்று விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், புதுக் கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில், இந்திய ஒன்றிய அரசை கண்டித்தும், கர்நாடக அரசைகண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு மாறாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாகவும், கர்நாடகா மாநில அரசு மேகதாதுவில் அணைகட்ட ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக் கது. உச்சநீதிமன்றம் சொன்னாலும், நடுவர் மன்றம் சொன்னாலும் நாங்கள் எதையும் கேட்க மாட்டோம் என்று அடாவடித்தனமாக கர்நாடக மாநில அரசும், அதன்முதல்வரும் மற்ற அமைச்சர்களும் தொடர்ந்து  பேசி வருகின்றனர். இது வரம்பு மீறிய செயலாகும். இந்திய ஒன்றிய அரசாங்கமும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்வதற்காக அனுமதி கொடுத்துள்ளது. இது வன்மையாக கண்டனத்துக்குரியது. இந்த நிலையில் கர்நாடக அரசு அனுமதி கேட்டிருந்தாலும், எல்லா விதமானஅதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்திய ஒன்றிய அரசாங்கம் ஆய்வுசெய்வதற்கான அனுமதியை வழங்கியது சட்டத்திற்கு விரோதமான ஒரு நடவடிக்கை. 

தமிழக‌ அனைத்துக் கட்சி தலைவர்கள், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, பேசியபோது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத் தான் அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அப்படியான ஒருஅனுமதியை வழங்க ஒன்றிய அரசுக்குஅதிகாரமோ உரிமையோ கிடையாது. நீதிமன்றத்தில் காவிரி இறுதித்தீர்ப்பில் எல்லாவிதமான அதிகாரங்களும் காவிரி மேலாண்மை வாரியத்துக்குமட்டுமே தான் உள்ளது என குறிப்பிட்டிருந்தது. இந்த சமயத்தில் கர்நாடக அரசு,ஒன்றிய அரசிடம் ஆய்விற்கான அனுமதியை கேட்டிருந்த போதும், மேலாண்மை வாரியத்தை நாட வேண்டும் என்று கூறாமல், அதிகாரமில்லாத நிலையில் இந்திய ஒன்றிய அரசு செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. 

உடனடியாக கர்நாடகாவிற்கு வழங்கிய அனுமதியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். அத்துடன் இதுவரை காவிரி மேலாண்மை வாரியத் துக்கு நிரந்தர தலைவரை நியமிக்காமல் ஒன்றிய அரசு இருப்பது கண்டிக் கத்தக்கது. உடனடியாக நிரந்தர தலைவரை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் தில்லி செல்லும் போது வலியுறுத்த வேண்டும். இது 4 மாநில விவசாயிகள், பொது மக்கள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒருநிரந்தர தலைவரை நியமிக்காமல் அலட்சியமாக இருந்து வருகிறது. கர்நாடகா தொடர்ந்து அணை கட்டும்முயற்சியில் ஈடுபட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களை திரட்டி அடுத்த கட்ட மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

;