tamilnadu

img

தற்காப்பு கலைப் போட்டி

 தஞ்சாவூர் அக்.29- குஜராத் மாநிலத்தில்  உள்ள குடோ என்ற சர்வதேச தற்காப்பு கலை அமைப்பின் சார்பில் போட்டி நடைபெற்றது. இதில் நடிகர் அக்சய்குமார் கலந்து கொண்டார். தேசிய அளவிலான பயிற்சி முகாமின் முக்கிய நோக்கமாக பெண்களுக்கு ஏற்படுகின்ற சமூக விரோதச் செயல்களில் இருந்து, பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதாகும். இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 800 க்கும் மேற்பட்ட மாணவர்களும், மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டனர்.  இதில் தமிழக குடோ சங்கத்தின் சார்பில் மாஸ்டர் கந்தமூர்த்தி (திருச்சி), மாஸ்டர் ஷேக் அப்துல்லா(தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம்) ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இதில் இவர்கள் இருவரும், தேசிய நடுவராகவும், தேசிய பயிற்சியாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செருவாவிடுதி கிராமத்தை சேர்ந்த வனப்புலி தற்காப்பு கலை பயிற்சியாளர் ஷேக் அப்துல்லாவை ஊர் மக்கள் பாராட்டி வரவேற்றனர்.  திருச்சிற்றம்பலம் பகுதியில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சினை கொடுத்து,  அவர்களை மாவட்ட, மாநில அளவில் நடக்கும் பல போட்டிகளில் கலந்து கொள்ள செய்து, பல்வேறு பரிசுகளை வெல்லச் செய்துள்ளார் ஷேக் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது.