tamilnadu

ஜன.8 வேலை நிறுத்த ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர் டிச.21- அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வரும் ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தஞ்சை மின்வாரிய அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளன தொழிற்சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், வட்டச் செயலாளர் பி.காணி க்கைராஜ் ராஜ், வட்டப் பொருளாளர்  எம். ஆரோக்கியசாமி, வட்ட  துணைச் செயலாளர் எஸ்.ரவி, தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன தஞ்சை வட்டச் செயலாளர் பொன். தங்கவேல், வட்ட இணைச் செயலா ளர் என்.சின்னதுரை, மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் வட்டச் செயலாளர் எஸ்.ஜெயமணி ராஜ், வட்ட தலைவர் எஸ். பூபதி மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு), தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம்,(ஏஐடியுசி) தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஜனதா தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் (ஹெச்.எம்.எஸ்) ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில், “தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது. வரும் 26.12.2019 அன்று தஞ்சை மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் வேலை நிறுத்த பிரச்சார வாயில் கூட்டம் நடத்துவது, ஜனவரி 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஊழியர்களை சந்தித்து பிரச்சாரம் செய்வது. இதுகுறித்து துண்டறிக்கை வெளி யிடுவது” என முடிவு எடுக்கப்பட்டது.

;