tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி

தஞ்சாவூர்:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி வரும் ஜூலை 23ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை நோக்கி, ஆயிரக்கணக் கான விவசாயிகள் பேரணியாகச் சென்று மனுகொடுப்பது என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தஞ்சை ஏஐடியுசி அலுவலகத்தில், காவிரிப்படுகை பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாநிலச் செயலாளர் டாக்டர்வே.துரைமாணிக்கம் கூட்டத்திற்கு தலைமைவகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் (சிபிஎம்) பெ.சண்முகம், திமுக விவசாய அணிச் செயலாளர் முன்னாள் எம்.பி, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

விடுதலை சிறுத்தைகள் விவசாய அணி பசுமை வளவன், வாழ்க விவசாயிகள் இயக்கம் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், மாநிலச் செய லாளர் சாமி.நடராஜன், மாநில நிர்வாகி பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட செயலாளர்கள் நாகப்பட்டினம் துரைராஜ், திருவாரூர் வி.எஸ். கலிய பெருமாள், கடலூர் மாவட்டத்தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க (சிபிஐ) மாவட்ட செயலாளர் பா. பாலசுந்தரம், மாவட்ட தலைவர் வீர.மோகன், நிர்வாகி மாசிலாமணி, தோழமைவிவசாய சங்க நிர்வாகிகள் கடலூர் இளங் கீரன், மக்கள் அதிகாரம் காளியப்பன், கக்கரை சுகுமாறன், அயனாவரம் முரு கேசன், பழனிராஜன், பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் கே.கே. ஆர்.லெனின், தாளா ண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ‘டெல்டாவை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக போராடி யோர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு களை வாபஸ் பெற வேண்டும். காவிரி நீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ள படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக டெல்டா மாவட்டங்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ள தளவாட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். சட்டமன்றமே அறி வித்த பிறகும், ஜனநாயக முறைப்படி போராட்டங்கள் நடத்திட காவல்துறை அனு மதி வழங்க வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வரும் ஜூலை 23 செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சா வூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவ சாயிகள் பேரணியாகச் சென்று, மாவட்ட ஆட்சியரை சந்தித்து, ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரி, கோரிக்கை மனு கொடுப்பது’ என தீர்மானிக்கப்பட்டது.
 

;