tamilnadu

img

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து  திடீரென பொங்கி எழும் தண்ணீர்

  தஞ்சாவூர், டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கரிசவயல் ஊராட்சிக்குட்பட்ட பூங்குடிக்காடு கிராமம் உள்ளது. இங்கு விவசாயியான மணிவண்ணன்- கலாராணி இவர்களின் தென்னந்தோப்பில், விவசாயப் பயன்பாட்டிற்காக இருபது வருடங்களுக்கு முன்பு ஆள்துளைக் கிணறு அமைக்கப் பட்டு, தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.  இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் இருந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து ஆர்ட்டீசியன் ஊற்றுப் போல் பத்தடி உயரத்திற்கு சீறிப் பாயத் தொடங்கியது. நீர் பொங்கி ஊற்றித் தொடங்கியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.  பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நீரூற்று அதிகம் காணப்பட்டு அதன் விளைவாக நீர் பொங்கி பத்தடிக்கு மேல் பொங்கி வருகிறது” என பொதுமக்கள் கூறுகின்றனர்.