தஞ்சாவூர், டிச.2- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டி னம் அருகில் உள்ள பெரியகோட்டை கிரா மத்தில் காடந்தாங்குடி அணைக்கட்டுக்கு அருகில் கண்ணனாற்றில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கூடுதலாக வந்ததால், ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள சொக்கனாவூர் மற்றும் பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி செய்யப் பட்ட 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள நெல் பயிர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் ஆகியோர் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் கண்ணனாற்றுப் பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பட்டுக்கோட்டை -பெரியவாழ்ந்தான், பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. அதே போல் தஞ்சாவூர் அருகே வல்லம் வாரியில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதால் மழைநீர் நெற்பயிர் பயிரிட்டுள்ள வயல் பகுதிக்குள் புகுந்துள்ளது. இதனால் வாண்டையார்இருப்பு, காட்டூர், கரை மீண்டார்கோட்டை, துறையுண்டார் கோட்டை, நாய்க்கான்கோட்டை, வரவுக் கோட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர் மூழ்கி யுள்ளது. அதே போல் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் சாகுபடி செய்யப் பட்ட சம்பா, தாளடி நெற்பயிர் சுமார் 100 ஏக்கரில் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதில் மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் திங்கள் காலை 11 மணி வரை மழை இல்லாமல் இருந்தது. பின்னர் அவ்வப்போது தூறலுடன் மழை பெய்தது. பேராவூரணி வட்டா ரத்தில் மழை காரணமாக 24 வீடுகள் சேதமடைந்தன. இவற்றில் 14 வீடுக ளுக்கு உடனடியாக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும் மழை யில் பலியான 2 மாடுகளின் உரிமை யாளர்களுக்கு நிவாரணம் வழங்கப் பட்டது.
வீடு இடிந்து காயம்
திங்கள்கிழமை காலை வீடு இடிந்து விழுந்ததில், பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி பொன்னுசாமி என்பவர் லேசான காயமடைந்து, அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். சேதுபாவா சத்திரம் அருகே அரியக்குட்டித் தேவன் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதைய டுத்து பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெய லெட்சுமி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கை.கோவிந்தராஜன் ஆகியோர் அங்கு சென்று, ஆக்கிர மிப்புகளை அகற்றி தண்ணீர் வடியச் செய்தனர். வாட்டாத்திக் கொல்லைக்காடு அருகே, வழுதலை வட்டம் காட்டாற்றில் நாணல் மண்டிக் கிடப்பதால் மழைநீர் செல்ல வழியின்றி, கரை உடைந்து அருகில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் பாய்ந்தது. இதனால் 3 ஹெக்டேர் பரப்பள வில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியது. மழை தொ டர்ந்தால் அருகில் உள்ள மேலும் பல நெல்வயல்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாவட்டத்தில் 4 ஆவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள் ளனர். மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நெய்வாசலில் 48.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தஞ்சாவூர் 6, வல்லம் 5, திருவையாறு 6, பூதலூர் 4.80, திருக்காட்டுப்பள்ளி 4.80, கல்லணை 3.10, ஒரத்தநாடு 14.80, வெட்டிக்காடு 13.60, கும்பகோணம் 17.60, பாபநாசம் 14.40, அய்யம்பேட்டை 14, திருவிடைமருதூர் 5, மஞ்சளாறு 7.60, அணைக்கரை 18.20, பட்டுக்கோட்டை 8.20, அதிராம்பட்டினம் 1.90, ஈச்சன்விடுதி 10.20, மதுக்கூர் 10, பேராவூரணி 24, என மொத்தம் 237.40 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 1308.80 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.