தஞ்சையில் அய்யன் திருவள்ளுவர் சிலையை அவமதித்ததை கண்டித்து சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவரசு, நகரச் செயலாளர் ஆதிமூலம், இன்பவளவன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.