தஞ்சாவூர், ஜூலை 21- பேராவூரணி காமராசர் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர் மா.கோ விந்தராசு திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை யில் 15 படுக்கைகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டை பார்வையிட்டார். மேலும், கொரோனா சிகிச்சைக்காக வரவழை க்கப்பட்டுள்ள ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான சுவாசக்கருவியினை பார்வை யிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து, தலைமை மருத்துவர் டாக்டர் பாஸ்க ரனிடம் கேட்டறிந்தார். முன்னதாக, மருந்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.