tamilnadu

img

தஞ்சையில் அதிமுக  கூட்டணியில் குழப்பம் தேமுதிகவினர் அதிருப்தி: விலை போனதாக புகார்  

தஞ்சாவூர் டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் தேமுதிக வுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்தில் அதிமுக போட்டி யிடுவதால், அதிருப்தியடைந்த தேமுதிகவினர் கட்சியிலி ருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் 4 -ஆவது வார்டு நெய்வாசல் ஊராட்சியாகும். இந்த வார்டுக்கு உட்பட்ட நெய்வாசல், சின்ன பொன்னாப்பூர், அரசப்பட்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஒன்றியக் குழு உறுப்பி னர் பதவியில் போட்டியிட தேமுதிக சார்பில் அதன் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் செ.அருள்தாஸ் (44) என்பவர் அக்கட்சியில் விருப்பமனு அளித்தார். அவ ரையே போட்டியிட தேமுதிகவும், கூட்டணி கட்சியான அதி முகவும் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் தேமுதிக வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த வார்டில், அதிமுக போட்டியிடுவதால் தேமுதிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ள னர்.  இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூரில் செய்தி யாளர்களிடம் அருள்தாஸ் கூறியதாவது: ஒரத்தநாடு ஒன்றி யத்தில் 31 ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான வார்டுகள் உள்ளன. இதில் 1 இடம் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டது. அதன்படி 4- வது வார்டில் போட்டியிட எனக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் வி.எஸ்.கே.பழனிவேல், ஒன்றியச் செயலாளர் அறிவழகன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். நானும் போட்டியிட விருப்ப மனுவை வழங்கி, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தேன். தற்போது எங்கள் கட்சியினர் அதிமுகவிடம் விலை போய் விட்டனர். என்னை போட்டியிட வேண்டாம், அங்கு அதிமுகவே போட்டியிடுகிறது என கூறி விட்டனர். நான் தேமுதிகவில் பல வருடங்களாக கட்சிப் பணியாற்றி, பொது மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்துள்ளேன். என்னு டைய வெற்றியை தடுக்கும் விதமாக அதிமுக சூழ்ச்சி செய்து, அக்கட்சியினரை களம் இறக்கியுள்ளது. இத னால் எங்களது 4- வது வார்டுக்குட்பட்ட கிராமங்களில் தேமு திகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளோம். இனி நாங்கள் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை” என்றார்.

;