தஞ்சாவூர், ஜூன் 3-தஞ்சாவூர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி முக்கியத் தலைவர்களில் ஒருவரான மறைந்த பி.ரத்தினம் பிள்ளையின் மூத்த மகனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும், தென்னை விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினருமான பி.ஆர்.நாதன்(67) பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு தனது இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமைகாலமானார். அவருக்கு, கொடியரசு என்ற மனைவியும், ஒளி என்கிற ரெங்கநாதன் என்ற மகனும், ஜீவரத்தினம், சாமுண்டீஸ்வரி, மகாலட்சுமி ஆகிய மகள்களும் உள்ளனர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, ஏ.கோவிந்தசாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.பழனிசாமி, குணசேகரன், மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா.திருஞானம்,திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை,பி.என்.ராமச்சந்திரன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன், அதிமுக பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் மற்றும் முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.