tamilnadu

img

கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் ஏரிகளில் மிதக்கும் அவலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

 தஞ்சாவூர், டிச.11-  தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி பகுதியில் கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்கள் ஏரி களில் மிதக்கின்றன. இதனால் சுகா தாரச சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே, பொதுப் பணித்துறை அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  பேராவூரணி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி அதிகாலை கரை கடந்த கஜா புயல் கோரத் தாண்டவம் ஆடிச் சென்றது. இதனால் இந்த பகுதியில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள், மா, பலா, தேக்கு என காட்டு மரங்கள், கயிறு தொழிற்சாலைகள், படகுகள் என பெரும் பாதிப்பு ஏற்பட்டன. எல்லாவற்றையும் தாண்டி இப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதார மாக இருந்த சுமார் 1.50 லட்சம் தென்னை மரங்கள வேரோடு சாய்ந்தன. சாய்ந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்த முடியா மல் 6 மாதங்கள் வரை தென்னை விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  காரணம் கோடை காலங்களில் தண்ணீரின்றி பட்டுப்போன தென்னை மரங்களை வெட்டி துண்டாக்கி திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு லாரிகளில் ஏற்றி சென்ற வியாபாரிகள் கஜா புய லுக்கு பின் இந்த பகுதியை திரும்பிக் கூட பார்க்கவில்லை.  வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த செலவிலேயே மரங்களை வெட்டி வெளியூர் வியாபாரி களுக்கு இலவசமாக வழங்கி அப்பு றப்படுத்தினர். வசதியற்றவர்கள் பல்வேறு இடங்களில் மரங்களை வெட்டி சாலை ஓரங்கள், கடந்த 10 ஆண்டுகளாக மழையின்றி வறண்டு கிடந்த ஏரிகளில் அப்புறப் படுத்தினர். கோடை காலம் என்ப தால் அப்போது பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை. ஆனால் அதன் பாதிப்பு தற்போது தான் தெரிய வருகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி துண் டாக்கி போடப்பட்ட மரங்கள் மிதக்க தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழுக தொடங்கி தண்ணீரும் நிறம் மாறி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் இதில் குளிப்பதற்கு கூட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த தண்ணீரை ஆடு, மாடுகள் குடித்தால் தொற்று நோய் பரவுமோ என்ற அச்சமும் பொது மக்களிடம் நிலவுகிறது.  எனவே ஏரி, குளங்களில் மிதக் கும் தென்னை மரங்களை பொதுப் பணித்துறை அதிகாரிகள் அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுப் பார்களா? என்பதே பொதுமக்க ளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

;