tamilnadu

img

குடியுரிமைச் சட்ட விளக்கப் பொதுக்கூட்டம்

தஞ்சாவூர், மார்ச் 8- மத்திய அரசின் மக்கள் விரோத, சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங் களை திரும்பப் பெற வலி யுறுத்தி, தஞ்சை மாவட்டம் சேது பாவாசத்திரம் அருகே செந்த லைப்பட்டினம் பள்ளிவாசல் அரு கில் அனைத்துக்கட்சியினர், ஜமா அத் சார்பில் விளக்கப் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற் றது. கூட்டத்திற்கு, முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.அப்துல் ஜபார் தலைமை வகித்தார். ஊரா ட்சி தலைவர் எம்.ரகுமத்துல்லா வரவேற்றார். பள்ளி இமாம் முபா ரக் கிராஅத் ஓதினார்.  தமுமுக மாநில துணைத் தலைவர் கோவை செய்யது, தமுமுக மாநிலப் பேச்சாளர் நஜ்மா பேகம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு முத்து.உத்திராபதி, பேராவூரணி ஜமாஅத் ஏஷியன் ஹெச்.சம்சு தீன் உள்ளிட்டோர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச் சாமி, காங்கிரஸ் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம், சிறுபான்மை பிரிவு நாகூர் கனி, சேக் இப்ராம்ஷா, தெட்சிணாமூர்த்தி, மாவட்டக் கவுன்சிலர் இலக்கியா நெப்போ லியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் இளந்தென்றல், அற நெறி மக்கள் கட்சி த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், திராவிடர் விடுதலைக் கழகம் மருத.உதயகுமார், மதிமுக ரவிச்சந்திரன், மனிதநேய ஜன நாயக கட்சி மாவட்டச் செயலா ளர் ச.அப்துல் சலாம், திமுக டாக்டர் ஆர்.சந்திரசேகரன், தமி ழக மக்கள் புரட்சி கழகம் ஆறு. நீலகண்டன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பொதுமக்கள் உள் ளிட்ட 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக செந்தலைப்பட்டினம் ஒன்றியக் கவுன்சிலர் கே.செய்யது முகம் மது நன்றி கூறினார்.

;