tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்

கும்பகோணம், அக்.4- பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாள ர்களுக்கு கடந்த 7 மாத சம்பள நிலுவையை உடனே வழங்க கோரியும், வேலை நேரத்தை குறைத்து ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிர்வாகத்தை கண்டித்தும், கும்பகோணம் மாவட்ட பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணம் பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் மயிலாடுதுறை குத்தாலம், செம்பனார் கோவில், சீர்காழி, பகுதியில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர்.  போராட்டத்திற்கு சங்க பொறு ப்பாளர்கள் செல்வம், செளந்தர்ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் மதியழகன் ராமசந்திரன் மாவட்ட தலைவர் பாலாஜி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் பார்த்திபன் சம்மந்தம் உள்ளிட்ட ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.