tamilnadu

img

வீட்டிலிருந்தே  மளிகை பொருட்களை  பெற்றுக்கொள்ள  ஏற்பாடு : மாவட்ட ஆட்சியர் தகவல் 

தஞ்சாவூர் : பொதுமக்கள் மளிகை பொருட்களை வீட்டிலிருந்தே  பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இஆப.,  அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பொதுமக்கள் மளிகை பொருட்களை வீட்டிலிருந்தே  பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ம.கோவிந்த ராவ் இஆப.,  அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது :-
மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரின் உத்தரவின்படி, கொரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத இச்சூழலில், மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, வீட்டிலிருந்து தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்து வீட்டிற்கே நேரடியாக கொண்டுவந்து விநியோகம் செய்ய தயாராக உள்ள மளிகைக் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 04362-230737, 7373780737 ஆகிய எண்களில் தஞ்சாவூர் ஓரியண்டல் சூப்பர் மார்க்கெட் கடையினையும், 9894103750 எனும் எண்ணில் தஞ்சாவூர் கீழவாசல் ஆறுமுகம்  சன்ஸ் கடையினையும், 9489657177, 9488657180, 7358392960, 9489657182, 7200762529 ஆகிய எண்களில் புண்ணியமூர்த்தி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் கடைகளையும், 9443337583 எனும் எண்ணில் தஞ்சாவூர் கீழவாசல் ஏ.கே.மளிகை கடையினையும் தொடர்புகொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 8870123100, 9344638851, 8015123100 ஆகிய எண்களில் கும்பகோணம் நால்ரோடு கிரீன் வெஜிடபிள்ஸ் கடையினையும், 9443111813, 9443111814, 0435-2426356  ஆகிய எண்களில் கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெரு பிரியம் மளிகை கடையினையும், 7538858892, 0435-2422242 ஆகிய எண்களில் கும்பகோணம் மோதிலால் தெரு சீமாட்டி சூப்பர் மார்க்கெட் கடையினையும், 9344300076, 0435-2426019 ஆகிய எண்களில் கும்பகோணம் மடத்து தெரு காவேரி மளிகை மற்றும் பாப்புலர் மளிகை ஆகிய கடைகளையும், 7373073030 எனும் எண்ணில் கும்பகோணம் பச்சையப்பன் தெரு தமிழ் பால் கடையினையும், 9442943366 எனும் எண்ணில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் சன் மெடிக்கல்ஸ் கடையினையும், 0435-2422028 எனும் எண்ணில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் சாலை பாப்புலர் மெடிக்கல்ஸ் கடையினையும், 0435-2430997 எனும் எண்ணில் கும்பகோணம் ஆயிகுளம் ரோடு ஆர்காடு மெடிக்கல்ஸ் கடையினையும், 9941692655 எனும் எண்ணில் திருவிடைமருதூர் சூப்பர் கேஸ் சிலிண்டர் கடையினையும் தொடர்புகொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.

பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 9952592413, 7094462621(வாட்ஸ்அப்) ஆகிய எண்களில் பட்டுக்கோட்டை பெரிய தெரு குறிஞ்சி ஷாப்பிங்  கடையினையும், 9789285809, 7094462621(வாட்ஸ்அப்) ஆகிய எண்களில் பட்டுக்கோட்டை பெரிய தெரு கோல்டன் சூப்பர் மார்க்கெட் கடையினையும், 9444209541 எனும் எண்ணில் பட்டுக்கோட்டை ஹை ஸ்கூல் ரோடு ரஜினி சூப்பர் மார்க்கெட் கடையினையும், 6383077743 எனும் எண்ணில் பட்டுக்கோட்டை பழனியப்பன் தெரு லக்கி ஹைபர் மார்க்கெட் கடையினையும், 9626563888, 9786873888 ஆகிய எண்களில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி முக்கம் ஹாஜி மெட்ரோ மால் கடையினையும், 9443274555 எனும் எண்ணில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரோடு பைவ் ஸ்டார் மளிகை கடையினையும், 9842477644 எனும் எண்ணில் பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பாரி மளிகை கடையினையும் தொடர்புகொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிட மேற்காணும் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மளிகை கடைகளை தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடியே பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்று பொருட்களை விநியோகம் செய்ய தயாராக இருக்கும் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடும் வாகனங்களுக்கும், பணியாளர்களுக்கும் உரிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

;