tamilnadu

img

தொடர் மழையால் வீடுகள் சேதம்... இழப்பீடு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிபகுதியில் தொடர்ந்து பெய்து வரும்மழை காரணமாக பல்வேறு இடங்களில், வீடுகள் இடிந்து சேதமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பெருமகளூர் பேரூராட்சி கே.ஆர்.புரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சரவணமுத்து (40), வாடகைக் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்று இருந்த நிலையில் இவரது வீட்டில் மனைவி தயாநிதி(34), மகன்கள் ஹரிஸ் (12), முகுந்தன்(5) ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டு வீட்டின் ஒருபகுதிமண்சுவர் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இடிந்து விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இதேபோல், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்காடு, மணிக் கட்டி தெருவில் வசித்து வருபவர் மூதாட்டிசுபேதா. இவர் ஓட்டு வீட்டில் தனியாகவசித்து வருகிறார். இவரது வீட்டின் மண்சுவர் மற்றும் கூரை சரிந்து விழுந்தது. ஆபத்தான நிலையில் தொடர்ந்துஅதே வீட்டில் வசித்து வருகிறார். பட்டுக்கோட்டை வட்டம் வாட்டாத்திக் கோட்டை தெற்கு, மேலத்தெருவில் வசித்து வரும் ரெங்கசாமி மகன் சந்தானம் என்பவரின் வீடும், மழையினால் சரிந்து விழுந்து சேதமடைந்தது. இதேபோல் பல இடங்களில் வீடுகள் இடிந்துபாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், “பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவதை நிறுத்தி விட்டதாக, வருவாய்த்துறையினர் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று, கிராம நிர்வாக அலுவலர்கள் பார்வையிடுவதில்லை. பருவமழைக் காலம் முடிந்து விட்டது என டிச.31 உடன் இழப்பீடு வழங்குவதை வருவாய்த்துறையினர் நிறுத்தி உள்ளனர். ஆனால் ஜனவரி மாதம் தொடங்கிஇன்று வரை மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

;