tamilnadu

img

தஞ்சை அருகே 3 கற்சிலைகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர், ஆக.22–  தஞ்சை அருகே குளத்தில் தூர்வா ரும் பணி மேற்கொள்ளும் போது, பழங் காலக் கற்சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு அருகேயுள்ள பெரும்புலியூர் கிராமத்தில் உள்ள மடாக்குளத்தில் சில நாட்களுக்கு முன்பு குடிமராமத்து பணி தொடங்கியது. இக்குளத்தில் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் புதன்கிழமை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப் போது, மூன்றரை அடி உயர சுப்பிரமணி யர், பைரவர் கருங்கல் சிலைகளும், சுமார் 1 அடி உயர ஆண் உருவம் கொண்ட சிலையும் கண்டெடுக் கப்பட்டன.  தகவலறிந்த வருவாய் துறை அலு வலர்கள் நேரில் சென்று சிலையைக் கைப்பற்றி திருவையாறு வட்டாட்சி யர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். பழங்காலத்தைச் சார்ந்த தாகக் கருதப்படும் இச்சிலைகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இக்குளத்தில் மேலும் சிலைகள் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதனால், மீண்டும் ஆழமாகத் தோண்டி பார்க்க வேண் டும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.