பதிலடி கொடுக்குமா இந்தியா?
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை அசால்ட்டாக நினைத்து அசமந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்து பல்வேறு விமர்சனங்களைப் பரிசாகப் பெற்ற நிலையில், 2-வது டி-20 ஆட்டம் வெள்ளியன்று நடைபெறுகிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வங்கதேச அணியும், பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியும் என இரு அணிகளும் வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் 2-வது டி-20 ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - வங்கதேசம்
இடம் : சவுராஷ்டிரா மைதானம், ராஜ்கோட்
நேரம் : இரவு 7 மணிக்கு