நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, அப்பா கணவர் ஆகியோரின் நடிப்பில் கவனம் செலுத்தாமல் ஒருபடி மேலே சென்று படங்களை இயக்கி வருகிறார். தற்போது விளையாட்டுத் துறையிலும் காலடிவைத்துள்ள ஐஸ்வர்யா, யுடிடி (UTT - ULTIMATE TABLE TENNIS) எனப்படும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் தமிழக அணியான சென்னை லயன் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக இணைந்து உள்ளார். சென்னை, தில்லி, புனே, கோவா, கொல்கத்தா மற்றும் மும்பை என 6 அணிகள் பங்கேற்கும் இந்த யுடிடி தொடர் வருகிற 25-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.