tamilnadu

img

பி.வி.சிந்து சாதித்தது எப்படி?

25-வது உலக பேட்மிண்டன் சாம்பி யன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரான பசலில் நடைபெற்றது.  இந்திய ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங் கனை நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி, 42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்று பி.வி.சிந்து புதிய சரித்திரம் படைத்தார்.  வெறும் 38 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தங்கப் பதக்கத்தை வென்றது சாதனை என்றா லும், ஒகுஹராவை வீழ்த்துவதற்காக அதிரடி வியூகம் வகுத்து அதைக் கச்சிதமாகச் செயல் படுத்திய விதம் தான் மிகப்பெரிய சாதனை யாகப் பார்க்கப்படுகிறது. சிந்து எந்த வகையான சுற்றாக இருந்தா லும் சரி, தொடக்கத்தில் மந்தமாகத் தொடங்கி பின்னர் அதிரடியாக விளையாடி வெற்றியை வசப்படுத்துவார். நடப்பாண்டு உலக பேட் மிண்டன் தொடரில் கூட சிந்து இதே வகை யான ஆட்டமுறையைத் தான் கையாண்டார். சிந்துவைப் பலமுறை வீழ்த்திய அனுபவம் பெற்ற ஒகுஹராவும், சிந்து மந்தமாகத் தான் ஆட்டத்தைத் தொடங்குவார் என எதிர் பார்த்து அசால்ட்டாக விளையாடினார். ஆனால் நடந்ததோ வேறு.   

தொடக்கப் புள்ளி முதலே ஆக்ரோஷ மாக விளையாடிய சிந்து டிராப் ஷாட்களை தவிர்த்து லோப் ஷாட், நெட்கில்லிங் ஷாட், டிரைவ் ஷாட்களில் அதிக கவனம் செலுத்தி ஒகுஹராவை திணறடித்தார். சிந்துவின் திடீர் அதிரடியால் புள்ளிகளைக் குவிக்க முடியா மல் திணறிய ஒகுஹரா டிராப் ஷாட்கள் மூலம் ஒன்றிரண்டு புள்ளிகள் எடுத்து (மொத்தம் 14 புள்ளிகள்) ஜப்பான் ரசிகர்களுக்கு ஆறு தல் அளித்தார்.        இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் டிராப் ஷாட்டிற்கு பெயர் பெற்ற ஒகுஹரா இறுதிப்போட்டியில் டிராப் செய் யவே நடுங்கினார். ஒகுஹரா டிராப் செய்ய முயலும் போதெல்லாம் கழுகு பார்வையுடன் காத்திருந்த சிந்து அதனை ஸ்மாஷ் விளாசி அதிர்ச்சி அளித்தார். சிந்துவின் தொடர் ஆக்ரோஷத்தால் 2வது செட்டில் ஒகுஹரா அழ ஆரம்பித்துவிட்டார்.  இறுதியில் சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒகுஹராவை இரண் டாண்டு காத்திருந்து பழிதீர்த்துக் கொண்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு உலக பேட்மிண் டன் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இதே ஒகுஹராவிடம்  சிந்து போராடி வீழ்ந்தார்.   தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்துவிற்கு (24) உலக பேட்மிண்டனில் இது 5-வது பதக்கம் [(2013, 2014 - வெண்கலம்), (2017, 2018 - வெள்ளி)] ஆகும். மேலும் உலக பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக பதக்கங்களை வென்ற ஜாங் நிங்கின் (சீனா) சாதனையை (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) சிந்து சமன் செய்து புதிய வரலாறு படைத்தார்.

 ராக்கெட் காரணமா? 

பி.வி.சிந்து பெரும்பாலும் ஜப்பானின் யோனெக்ஸ் (YONEX) ராக்கெட்டில் தான் விளையாடுவார். தற்போது அதனை மாற்றிவிட்டு லி நிங் (LI NING) தயாரிப்பு ராக்கெட்டை தேர்வு செய்து அதன் மூலம் வெற்றியை குவித்துள்ளார். சீனாவை சேர்ந்த லி நிங் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 50 கோடி ரூபாய்க்கு சிந்துவை ஸ்பான்சராக வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.