tamilnadu

img

ஊக்கமருந்து பிரச்சனை... கென்ய மாரத்தான் வீரருக்கு 4 ஆண்டு தடை

நைரோபி
நீண்ட தூர ஓட்டப்பந்தய விளையாட்டான மாரத்தானில் பிரபலமானவர்  வில்சன் கிப்சாங். கென்யாவைச் சேர்ந்தவரான இவர் ஒலிம்பிக் தொடரில் (2012- லண்டன்) வெண்கல பதக்கமும், உலக சாதனையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் போட்டி நடைபெறும் நேரத்தில் மட்டும் கண்ணில் தென்படும் வில்சன் கிப்சாங் மற்ற நேரங்களில் மறைமுமாக இருந்துள்ளார். தடகள விதிமுறைப்படி வீரர்கள் போட்டி இல்லாத காலங்களில் தான் இருக்கும் இடத்தை அடிக்கடி ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு முறையாக  தெரியப்படுத்த வேண்டும். ஆனால் வில்சன்  இருக்கும்  இடத்தை தெரியப்படுத்தவில்லை. மேலும் ஊக்கமருந்து சோதனையை தவிர்க்க தவறான தகவல்களையும் அளித்திருக்கிறார். இதே மாதிரி 4 முறை (13 மாதங்களில்) சமாளித்துள்ளார். இதனால் கடுப்படைந்த ஊக்கமருந்து தடுப்பு முகமை தடகள சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்க ,"ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் வில்சன் கிப்சாங்-க்கு 4 ஆண்டு தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடை 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.  

ஆனால் வில்சன்ஊக்கமருந்து பயன்படுத்தினரா என்ற விபரம் இனிமேல் தான் வெளியாகும். ஒருவேளை அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தால் அவரது தண்டனை காலம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

;