tamilnadu

img

காட்டுத்தீ புகை எதிரொலி ஆஸ்திரேலிய ஓபன் ரத்து?

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்துவரும் காட்டுத் தீயால் அப்பகுதி வானம் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்தக் காட்டுத் தீ,  மூன்று மாதங்களைக் கடந்து தற்போதும் விடாமல் எரிந்துகொண்டே உள்ளது. தீயை அணைக்க ஆஸ்திரேலிய அரசு  மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலனில்லாமல் போய்விட்டன. குறிப்பாக விக்டோரியாவின் சில  பகுதிகள் நெருப்பில் தான் தத்தளிக்கிறது.  காட்டுத்தீயில் பாதிக்கப்படாத சில நகரங்கள் புகையில் சிக்கி திணறி வருகின்றன. குறிப்பாக சிட்னி, மெல்போர்ன் போன்ற பகுதிகள் புகையால் அதிக காற்று மாசுபாட்டைச் சந்தித்துள்ளது.  இந்நிலையில், ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொட ரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் முதன்மை சுற்றுக்கு முன் னேறு வதற்கான தகுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செவ்வா யன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த டேலிலா ஜகுபோவிச் என்ற வீராங்கனை சுவிட்சர்லாந்தின் ஸ்டெபானியை எதிர் கொண்டார். இருவருமே டென்னிஸில் இளசுகள் என்பதால் ஆக்ரோஷமாக விளையாடினர். இந்த போட்டியின் 2வது செட்டின் போது ஜகுபோவிச் காற்று மாசு புகையால் அவதிப்பட்டார். 

தொடர் இருமலால் ஒரு கட்டத்தில் மயக்கம் வரும் அளவிற்கு நிலைகுலைந்து போனார். அவர் கைத்தாங்களாக கோர்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  தொடர்ந்து அவதிப்பட்டதால் போட்டியில் இருந்து வெளியேறு வதாகத் தெரிவித்தார். இதனால் ஸ்டெஃபானி வெற்றி பெற்றார். இதே போலக் கனடாவைச் சேர்ந்த பவுச்சார்டு மார்பில் வலி இருப்ப தாக தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விளையாடினார்.  தகுதி சுற்று ஆட்டத்திற்கே காற்று மாசுவால் இவ்வளவு சிக்கல் வருவதை உணர்ந்த ஆஸ்திரேலிய டென்னிஸ் சம்மேளனம் ஆஸ்திரேலிய டென்னிஸ் தொடரை வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கத் திட்டமிட்டுள்ளது. 

;