முன்னணி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஆடவர் ஒற்றையர்
ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் 3-ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 17-வது இடத்தில் உள்ள இத்தாலியின் பெர்ரேட்டினியை 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு நான்காவது சுற்று ஆட்டத்தில் அதிரடிக்குப் பெயர் பெற்ற ஜப்பானின் நிஷிகோரி 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தான் வீரர் குகுஸ்கினை பந்தாடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதி ஆட்டங்கள் : ஆடவர் ஒற்றையர்
ஜோகோவிச் (செர்பியா) - கோபின் (பெல்ஜியம்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) - நிஷிகோரி (ஜப்பான்), பெல்லா (அர்ஜெண்டினா) - பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), நடால் (ஸ்பெயின்) - ஷாம்குயர்ரி (அமெரிக்கா)