tamilnadu

img

உலக மண் தினம்: மரம் நடும் விழா

சேலம், டிச.7- சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஸ்டேட் வங்கி சார்பில் உலக மண் தினத்தை முன்னிட்டு 1000 மரங் களை நடும் விழா நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள அரங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட தைலாக்கவுண்டனூர் ஏரி சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. உலக மண் தினத்தை முன்னிட்டு மண் வளத்தைக் காக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும், இயற்கையை பாதுகாக்கவும் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏரி கரையில் மரம் நடு விழா  நடைபெற்றது. இதில் மண்டல மேலாளர் ஷ்யாம் சுந்தர் பிரசாத், உதவி பொதுமேலாளர் பாபு, பாலச்சந்தர், காயத்ரி  மற்றும் சதீஸ் உள்ளிட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் குறிஞ்சி உழவர் மன்ற நிர்வாகிகள் அர்த்த நாரி, சுதன்குமார், தாயுமானவன் உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மரக் கன்றுகளை நட்டனர்.