tamilnadu

வீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு

இளம்பிள்ளை, ஜன. 14- சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை சார்பாக தேசிய உணவு பாது காப்பு இயக்கத்தின் நிலக்கடலை வட்டார பெரு விளக்க செயல்விளக்கத்திடல்களை பார்வையிட்டு, வேளாண்மை துணை இயக்குனர் எம்.பாலையா ஆய்வு செய்தார். கடத்தூர் கிராமத்தில் மாணிக்கம், ராஜபாளை யம் கிராமத்தில் பெருமாள் மற்றும் வெங்கடாசலம் ஆகியோரின் வயலில் அமைக்கப்பட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் நிலக்கடலை வட் டார பெருவிளக்க செயல்விளக்கத்திடல்களை வேளாண்மை துணை இயக்குனர் பார்வையிட்டு புதிய தொழில்நுட்பங்களை உரிய முறையில் கடைப் பிடிக்க ஆலோசனை வழங்கினார். இதைத்தொடர்ந்து வேளாண் விரிவாக்க மைய  கிடங்கில் உள்ள விதைகள் நுண்ணூட்டம் மற்றும் உயிர் உரங்கள் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். மேலும், இந்த ஆண்டு செயல்படுத்தப் படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை உரிய காலத்தில் முடிக்க அறிவுரை வழங்கினார்.  இந்த ஆய்வில் வேளாண்மை உதவி இயக்குனர் என்.நாகபசுபதி, வேளாண்மை அலுவலர் ப.கார்த்தி காயினி, துணை வேளாண்மை அலுவலர் தே.சீனி வாசன் மற்றும் அனைத்து அலுவலர்கள் உடனி ருந்தனர்.

;