tamilnadu

img

குடிநீர் வழங்கக்கோரி தீக்குளிக்க முயற்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

சேலம், மே 30-குடிநீர் வழங்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 9 பேர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட திம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும்  அவதிக்குள்ளாகி வந்தனர். இதற்கிடையே அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடும்  ஆபரேட்டர் பழனிசாமி என்பவரிடம் கேட்டபோது,அவர் தண்ணீர் திறந்து விடமறுத்ததுடன், மிக தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளுடன் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முறையிட வந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் அனைவரும் மண்ணெண்ணையை தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அருகில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சேலம் நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  இதன்பின் உயர் அதிகாரிகளுடன் பேசி முறையாக குடிநீர்வழங்க நடவடிக்கை எடுப்பதாககாவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்துசென்றனர். இச்சம்பவத்தால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டது.

;