சேலம், செப்.1- சேலம் மாநகராட்சி சார்பில் மரம் நடும விழா ஞாயிறன்று நடைபெற்றது. சேலம் மாநகராட்சியின் சார்பில் நகருக்குள் வனம் என்ற நோக்கோடு பல் வேறு இடங்களில் மரக் கன்றுகள் நடும் பணியை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அஸ்தம் பட்டி மண்டலம் 12ஆவது கோட்டத்தில் அமைந்துள்ள காக்காயன் காடு நுண்ணு யிர் தயாரிக்கும் இடத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரே.சதீஸ் தலைமையில், 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.