tamilnadu

img

திருநங்கை மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சேலம், மே 4-சேலத்தில் திருநங்கை மீதுகொடூரத் தாக்குதலை நடத்திய காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் கடந்த செவ்வாயன்று இரவு சனா மற்றும் கண்ணகி ஆகிய இரண்டு திருநங்கைகளும் உணவு அருந்திவிட்டு பேருந்திற்காக காத்து நின்றுள்ளனர். அப்போது, பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் ராம் சக்திவேல் சாதாரண உடையில் வந்து இவர்கள் இருவரையும் வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதற்குஎதிர்ப்பு தெரிவித்த சனா என்பவரை காவல் ஆய்வாளர் ராம் சக்திவேல், நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் தடியால்கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், கால்களை பிடித்துதரதரவென இழுத்து சென்றுகடுமையாகத் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், நடுரோட்டில் வைத்து அவரின் உடைகளைகிழித்துள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சனா,அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுசம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட திருநங்கை சனாவை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குழந்தைவேலு, எம்.குணசேகரன், மாநகர வடக்கு செயலாளர் எம்.முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் என்.பிரவின்குமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.இதன்பின், திருநங்கைகள் மீது கொடூர தாக்குதலை தொடுத்த சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உடன் இருந்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட திருநங்கைக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம்மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் சனியன்று சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

;