சேலம் சூரமங்கலத்தில் பல கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வந்த போடிநாயக்கன் பட்டி ஏரி சுமார் 20.6 ஏக்கர் பரப்ப ளவு கொண்டது. தற்போது, இந்த ஏரியின் நீர்வழிப் பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய் யப்பட்டுள்ளன. இதேபோல், மாமாங்கம் ரெட்டிப்பட்டி, பழைய சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளி லுள்ள வீடுகள், தொழிற்சாலை கள் மற்றும் இறைச்சி கடைக ளின் கழிவுகள் நேரடியாக இந்த ஏரியில் கொட்டப்படுகிறது. இத னால் சுற்றுவட்டார மக்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த இந்த ஏரி, தற்போது கழிவுநீர்க் குட்டையாக மாறியுள்ளது.
இப்பகுதியில் நிலத் தடி நீர் பெரிதும் மாசடைந்து உள்ளதோடு, அப்பகுதிகளிலுள்ள கிணற்று நீரும் துர்நாற்றம் வீசுவ தால் பயன்படுத்த முடியாத சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் ஏரியில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியே தெரி யாத வகையில் ஆகாயத் தாம ரைகள் ஏரி முழுவதும் சூழ்ந்து கிடக்கின்றன. மறுபுறம், ஏரிக் கரைகளில் கருவேல மரங்களும் அதிக அளவில் முளைத்து நிற் கின்றன. முன்னதாக, கடந்த ஆண்டு மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்போடு ஏரியை ஆக்கிரமித்திருந்த ஆகாயத் தாமரைகள் மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட் டன.
ஆனால், ஏரியை சுத்தப்ப டுத்தி பராமரிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மற்றும் அதி காரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் தற் போது மீண்டும் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் பல லட்ச ரூபாய் செலவு செய்து ஆகாயத் தாமரைகளை அகற்றி யும் பயனில்லாமல் போய் விட்டது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
(ந.நி)