tamilnadu

img

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திடுக... கையெழுத்து இயக்கம் நடத்த சிஐடியு முடிவு....

சேலம்:
கேரளாவைப் போல் தமிழகத்திலும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவது என சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன(சிஐடியு) கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநிலக்குழு கூட்டம் சம்மேளன உதவி தலைவர்ஏ.பிச்சமுத்து தலைமையில் சேலம் புதிய பேருந்து நிலையம் விபிசி நினைவகத்தில் நடைபெற்றது. சங்க பொதுச்செய லாளர் ஆர்.வெங்கடபதி வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். கூட்டத்தில், கேரளாவைப் போல் தமிழகத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவது  மற்றும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள வெள்ளையனே வெளியேறு இயக்க மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சம்மேளன பொருளாளர் அருள்குமார், நிர்வாகிகள் எ.கோவிந்தன், ம.கணேசன், பாண்டி, குமார், முருகேசன், எம். பி. கே. பாண்டியன், உள்ளிட்ட சம்மேளன குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

;