tamilnadu

சேலத்தில் அறிவியல் கண்காட்சி

சேலம், ஜன.4- சேலம், ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில்  நடை பெற்ற அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவ, மாணவிகள் சனியன்று காட்சிப்படுத்தி இருந்தனர். சேலம், ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே அறிவி யல் மற்றும் கணிதம் மீதான ஆர் வத்தை ஊக்குவிக்கும் வகையில் அறி வியல் மற்றும் கணித கண்காட்சி நடை பெற்றது. இக்கண்காட்சியை சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி துவக்கி வைத்தார். இதில் துரித வகை உணவுகளால் உட லுக்கு ஏற்படும் தீமைகள் மற்றும் பாரம் பரிய உணவுகளால் உடலுக்கு ஏற் படும் நன்மைகள் மற்றும் மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவது, புவி வெப்பமயமாதலை தடுத்தல்,விண் வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.  மேலும் அறிவுத்திறனை ஊக்கு விக்கும் கணித எடுத்துக்காட்டுகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இக்கண்காட்சியை பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். பார்வையாளர்க ளுக்கு தங்கள் அறிவியல் படைப்பு களின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து மாணவர்கள் விளக்கமளித்த னர். தொடர்ந்து சிறப்பான அறிவியல் மற்றும் கணிதப் படைப்புகளை காட் சிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்பட்டன.

;