tamilnadu

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை

சேலம், ஆக. 24- அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக் குநர் ராஜகோபாலன் தகவல் தெரி வித்துள்ளார். இது குறித்து சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக் குநரும், முதல்வருமான ராஜகோபா லன் தெரிவித்ததாவது, 2020 ஆம் ஆண்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர வும், தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு சேரவும்  www.skilltraining.tn. gov.in என்ற இணையதளம் வாயி லாக விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

சேலம் மண்டலத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலம், மேட் டூர், கருமந்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சேலம், மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையம் ஆகிய வற்றில் சேர்க்கை உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இந்த இணையதள கலந்தாய்வுக்கான தர வரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசித் தேதிக் குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.  அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக் கணினி, மிதிவண்டி, சீருடை, பாட நூல், வரைபடக் கருவி, காலணி, இலவ சப் பேருந்து அட்டை, மாதாந்திர உத வித்தொகை மற்றும் பல சலுகைகள் வழங்கப்படுவதோடு, பயிற்சி முடித்த பின் வேலையும் பெற்றுத் தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;