tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்திடுக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

சேலம், ஜூலை 13- உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின்  5 ஆவது சேலம் மாவட்ட மாநாடு சனியன்று சங்கத்தின் மாவட்ட தலைவர் பா.வாசுதேவன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இணைச்செயலாளர் து.பெரிய சாமி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட துணைத்தலைவர் க.கோவிந் தராஜீ வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் மு.சுப்பிர மணியன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டசெயலாளர் த.ஜான் ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் அ.பாஸ்கரன் ஆகியோர் அறிக் கையை முன்மொழிந்து பேசினர். மாநில துணைத்தலைவர் ந. திருவரங்கன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இ.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
தீர்மானங்கள்
தமிழகத்தில் தற்போது உள்ள குடிநீர் பிரச்சனை, வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்ப டுத்த முடியாத சூழ்நிலை நில வுகிறது. இதனை தவிர்க்க உள்ளாட்சித் தேர்தலை உடன டியாக நடத்திட அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து  அவர்களுக்கு முறைப்படுத்தப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளாட்சித் துறையில் நிலவும் அரசியல் தலையீட்டை தடுக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் கொண்ட தலைவாசல், அயோத் தியாப்பட்டணம், பெத்தநாயக் கன்பாளையம், ஓமலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கிட வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
இதைத்தொடர்ந்து மாநாட் டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட தலைவரான பா.வாசுதேவன், மாவட்டச் செயலாளராக த. ஜான்ஆஸ்டீன், மாவட்ட பொரு ளாளராக க.கோவிந்தராஜ் உள்ளிட்ட 17 பேர் கொண்ட  மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டனர். முடிவில், மாநில செயலா ளர் இரா.ஆறுமுகம் மாநாட்டை நிறைவுரையாற்றினார்.

;