tamilnadu

img

அரசு பள்ளியில் குடியரசு தின விழா

இளம்பிள்ளை, ஜன. 27- இளம்பிள்ளை அருகே  இடங்கணசாலை, மேட்டுக்காடு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஞாயிறன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.  சேலம் மாவட்டம், இடங்கணசாலை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி தேசிய கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து விளையாட்டு, பேச்சு,  கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளை முன்னாள் மாணவர்களான ராஜா, குமார் உள்ளிட்டோர் வழங்கினர்.  இதேபோன்று இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் வருதராஜ் தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தை வேலு தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

;