tamilnadu

img

அரசாணை 56-ஐ ரத்து செய்க அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சேலம், மார்ச் 15- அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க முன்னணி ஊழியர் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் முன்னணி ஊழியர் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது.  இதில் இளைஞர்க ளின் வேலை வாய்ப்பை தட்டிப் பறிக்கின்ற அரசாணை எண் 56 யை ரத்து செய்ய வேண்டும்.  2019ஆம் ஆண்டு வேலைநிறுத்தப் போராட் டத்தின் போது அரசால் வழங்கப் பட்ட 17b குற்ற குறிப்புகள் மற்றும் இட மாறுதல்கள் திரும்ப பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்த வேண் டும். சத்துணவு-அங்கன்வாடி, வரு வாய் கிராம உதவியாளர்கள், எம் ஆர்பி, செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் பெற்றிடவும்,  எட்டாவது ஊதிய மாற்றத்தில் 21 மாத கால நிலுவைத் தொகை யினை வழங்கிட வேண்டும் உள் ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி வலுவான இயக்கங்களை நடத்திட திட்டமிடப்பட்டது.  இதில் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பி.சுரேஷ் வரவேற்புரையாற் றினார். மாநிலத் துணைத் தலை வர் எம்.சீனிவாசன் துவக்க உரை யாற்றினார். மாநில தலைவர் எம்.அன்பரசு, மாநில பொருளாளர் எம். பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற் றினர். மாநில பொதுச்செயலாளர் ஏ. செல்வம் நிறைவுரையாற்றினர். மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார். இதில் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

;